தொடக்க வீரராக இறங்கி சொதப்பிய கே.எல் ராகுல்! போட்டிக்கு பின் கூறிய காரணம்
ஜிம்பாப்வேயில் தாக்கும் வகையில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் - கே.எல்.ராகுல்
கடைசி ஒருநாள் போட்டியில் ஓட்டங்கள் குவிக்க முயற்சிப்பேன் என கே.எல்.ராகுல் நம்பிக்கை
நான் தொடக்க வீரராக களமிறங்கியது வேலை செய்யவில்லை என இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 190 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 81 ஓட்டங்களும், கில் 82 ஓட்டங்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். இதனால் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில்லுக்கு பதிலாக கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினார். ஆனால் அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய கே.எல்.ராகுல், 'திருத்தப்பட்ட துடுப்பாட்ட வரிசை வேலை செய்யவில்லை. நான் சில ஓட்டங்களை எடுக்க விரும்பினேன். அது நடக்கவில்லை. அடுத்த போட்டியில் ஓட்டங்கள் குவிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நடுவில் துடுப்பாட்டம் செய்யும் வாய்ப்பு பல வீரர்களுக்கு கிடைத்தது நல்லது. நாங்கள் ஆழமாக துடுப்பாட்டம் செய்கிறோம். மேலும் யாரும் பதற்றமடையவில்லை' என தெரிவித்துள்ளார்.