கே.எல் ராகுல்- நடிகை அதியா ஷெட்டி திருமணம்! வைரல் புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் இன்று மகாராஷ்டிராவின் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது.
கே.எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே. எல் ராகுலுக்கும், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் இடையே ஜனவரி 23ம் திகதியான இன்று மகாராஷ்டிராவின் கண்டாலாவில் உள்ள பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
“In your light, I learn how to love…” ♥️
— K L Rahul (@klrahul) January 23, 2023
Today, with our most loved ones, we got married in the home that’s given us immense joy and serenity. With a heart full of gratitude and love, we seek your blessings on this journey of togetherness. 🙏🏽@theathiyashetty pic.twitter.com/1VWxio5w6W
இது தொடர்பாக பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு "உன் வெளிச்சத்தில், எப்படி காதலிக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று, எங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுடன், எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுத்த வீட்டில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நன்றியுடனும் அன்புடனும் நிறைந்த இதயத்துடனும், இந்த பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் வேண்டுகிறோம் எனவும் அதியா தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் வாழ்த்து
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ராகுல் மற்றும் அதியா தம்பதியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் அன்பாகவும், ஒன்றாகவும் இருக்க வாழ்த்துகிறேன்! கே.எல். ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு வாழ்த்துக்கள்." என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
"வாழ்த்துக்கள் சகோதரரே! கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்று சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
If it ain't like this, we don't want it! Athiya Shetty and KL Rahul's love story has been nothing short of a fairy-tale that was followed by a 'happily-ever-forever' with their wedding today.
— Femina (@FeminaIndia) January 23, 2023
Congratulations to the newly-weds! pic.twitter.com/GyCrvHutwb
கே.எல் ராகுல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை, ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல் ராகுல் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.