சிக்ஸர் மழையால் 17 பந்தில் 50 ரன் விளாசிய வீரர்! 83 ரன்னில் சுருண்டு மில்லர் அணி தோல்வி
SA20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
சரவெடியாய் வெடித்த வீரர்கள்
Kingsmead மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டர்பன் அணி முதலில் ஆடியது. தொடக்க வீரர் Breetzke 43 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
@DurbansSG (x)
அதன் பின்னர் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டோய்னிஸ் அவுட் ஆனார். கடைசி மூன்று ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடிய கிளாசென், 17 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் குவித்தார்.
@DurbansSG (x)
நூர் அகமது மிரட்டல் பந்துவீச்சு
இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 208 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லரின் பார்ல் ராயல்ஸ் அணி, 13.2 ஓவரில் 83 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக மிட்சேல் வான் பியூரென் 36 (27) ஓட்டங்கள் எடுத்தார். டர்பன் தரப்பில் நூர் அகமது 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
@DurbansSG (x)
@Paarlroyals (x)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |