ஜேர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்: 12 பேர் படுகாயம்! சந்தேக நபர் கைது
ஜேர்மனியின் ஹாம்பர்க் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த மிகப்பெரிய கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து சம்பவம்
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பன்னிரண்டு பேர் காயமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக "முக்கிய நடவடிக்கை" எடுக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், கைது செய்யப்பட்ட நபரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான ஹாம்பர்க்கில் உள்ள பரபரப்பான மத்திய ரயில் நிலையம், உள்ளூர், மண்டல மற்றும் நீண்ட தூர ரயில் சேவைகளுக்கான முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது.
12 பேர் காயம்
டிபிஏ செய்தி நிறுவனம், தீயணைப்புத் துறையை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாதிக்கப்பட்டவர்களில் காயங்களின் தீவிரம் கணிசமாக வேறுபடுகிறது. காயமடைந்தவர்களில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எஞ்சிய மூன்று பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
இந்த தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை என்று பில்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதிகாரிகள் மேலதிக விவரங்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |