ஐரோப்பிய நாடொன்றில் பாடசாலை மாணவர் ஒருவரின் வெறிச்செயல்: பறிபோன உயிர்கள்
கிழக்கு ஸ்லோவாக்கியாவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சக மாணவர்கள் இருவர்
குறித்த தாக்குதல் சம்பவத்தில் மூன்றாவது இளம் பெண் காயங்களுடன் தப்பியுள்ளார். உள்ளூர் பொலிசார் ஆரம்பத்தில் தெரிவிக்கையில், சந்தேக நபர் உடற்பயிற்சி கூடத்தின் 18 வயது மாணவர் என்றும், தாக்குதலை அடுத்து சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளதாகவும் பொதுமக்கள் நெருங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.
இருப்பினும் துரிதமாக செயல்பட்ட பொலிசார், தாக்குதல்தாரியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சக மாணவர்கள் இருவர் மற்றும் ஒரு ஆசிரியர் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து எதுவும் இல்லை
இந்த நிலையில், தற்போது உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றும் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் உள்விவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்தவர்களுக்கு பிரதமர் ராபர்ட் ஃபிகோ தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். போலந்து எல்லையில் அமைந்துள்ள Spisska Stara Ves என்ற கிராமத்திலேயே குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |