பெர்லின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் குவிக்கப்பட்ட பொலிசார்... காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர்
பெர்லின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் வாள் வெட்டு சம்பவத்தை அடுத்து ஒருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோலோகாஸ்ட் நினைவிடம்
சம்பவத்தை அடுத்து, நினைவிடம் மற்றும் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடந்த சம்பவம் தொடர்பில் பெர்லின் பொலிசார் தெரிவிக்கையில்,
கூர்மையான பொருளால் காயமடைந்த அந்த நபரை தீயணைப்புப் படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும், அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள ஹோலோகாஸ்ட் நினைவிடத்தின் வடக்குப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவப்பகுதியில் தற்போது பொலிசார் உட்பட பல்வேறு அவசர உதவி வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் சம்பவத்தையடுத்து பலர் அதிர்ச்சியடைந்துள்ளதால், அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய இளைஞன் கைது
தற்போது தூதரகத்துக்கோ அல்லது பெர்லின் நினைவிடத்துக்கோ எந்த தொடர்பும் இல்லை என்றும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் தலைமறைவாகி உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மன் தலைநகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு ரஷ்ய இளைஞன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில், குறித்த தாக்குதல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் தரப்பு சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |