ஜேர்மனியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்: சந்தேக நபரை மடக்கி பிடித்த பொலிஸார்
ஜேர்மனியில் ரயிலில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் ரயிலில் கத்திக்குத்து
வடக்கு ஜேர்மனியில் புதன்கிழமை பிராந்திய ரயிலில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹம்பர்க் மற்றும் கீல் நகரங்களுக்கு இடையில் பயணித்த ரயிலில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நாட்டின் மத்திய பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
இந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், சுமார் ஐந்து பேர் வரை காயமடைந்து இருக்கலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தாக்குதலில் எத்தனை பேர் காயமடைந்தனர் அல்லது அவர்களின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
சந்தேக நபர் அதிரடி கைது
ஜேர்மன் ரயிலில் பயங்கர தாக்குதலை நடத்திய சந்தேக நபர் Brokstedt நகரில் உள்ள ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
Reuters
இதையடுத்து ஜேர்மனியின் தேசிய ரயில் நிறுவனம், ஹாம்பர்க் மற்றும் கீல் இடையேயான பாதையில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் உள்நோக்கத்தை தீர்மானிக்க கூட்டாட்சி மற்றும் மாநில காவல்துறை நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிராந்திய உள்துறை அமைச்சர் Sabine Suetterlin-Waack பேசிய போது, தாக்குதலால் தான் அதிர்ச்சியடைந்தேன், மேலும் தனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Reuters

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.