பிரான்சில் பரபரப்பு! பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல்
பிரான்சில் பொலிஸ் அதிகாரியை மர்ம நபர் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் மார்சேய் நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இத்தாக்குலில் ஈடுபட்ட நபரை சட்ட அமலாக்கத்துறையினர் சுட்டுக் கொன்றகதா AFP செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், தாக்குதல்தாரி உயிரிழக்கவில்லை எனவும், ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக சில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பவயிடத்தில் பெரிய அளவிலான பொலிஸ் மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மார்சேய் நகர மேயர் Benoit Payan-ம் சம்பவயித்திற்கு விரைந்துள்ளார். மேலும், சட்ட அமலாக்கத்துறையினரின் மிகவும் தைரியமான நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.
தற்போது வரை தாக்குதல்தாரியின் அடையாளம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அதிகாரிகளுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin, தாக்குதலில் ஈடுபட்டவர் பிரெஞ்சு குடிமகன் என்றும், அவர் மீது எந்தவித குற்ற வழக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.