ஜேர்மனியில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்: சிதறி ஓடிய மக்கள்
ஜேர்மனியில் Moers நகரில், கடந்து செல்பவர்களை கத்தியால் தாக்கிய நபரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில், காயம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு கத்திகள்
ஜேர்மனியின் Solingen பகுதியில், உள்ளூர் விழா ஒன்றில் மிக மோசமான தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தற்போது Moers நகரில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 2.45 மணியளவில் அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் Moers நகரில் தம்மை கடந்து செல்பவர்களை கத்தியால் தாக்குவதும் அச்சுறுத்துவதுமாக உள்ளார் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அந்த நபரை அடையாளம் கண்டுள்ளனர். அவரிடம் இரண்டு கத்திகள் இருந்துள்ளது. சரணடைய பொலிசார் முன்வைத்த கோரிக்கைகளை அந்த நபர் ஏற்க மறுத்துள்ளதை அடுத்து, பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
புலம்பெயர் கொள்கை
இதில் படுகாயமடைந்துள்ள அந்த நபர் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார். Moers நகரில் இருந்து சுமார் 28 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Solingen பகுதியில் உள்ளூர் விழா ஒன்றில் 26 வயது சிரியா நாட்டவர் ஒருவர் கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சமபவத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன், 8 பேர்கள் காயங்களுடன் தப்பினர். அந்த நபருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தாக்குதலை முன்னெடுத்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஜேர்மனியின் புலம்பெயர் கொள்கை மீதான விவாதத்தையும் அந்த தாக்குதல் மீண்டும் முன்னெடுக்க வைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |