புகை குண்டுகளை வீசி ஒன்பது பேர்களை கத்தியால் தாக்கிய நபர்... பின்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு
தைவானில் சுரங்கப்பாதை நிலையத்திற்கு அருகில் புகை குண்டுகளை வீசி, கத்தியுடன் ஒருவர் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதில் குறைந்தது ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் மரணம்
கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து, கைதாவதைத் தவிர்ப்பதற்காக அந்த நபர் ஒரு கட்டிடத்திலிருந்து குதித்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக தைபே நகர மேயர் சியாங் வான்-ஆன் தெரிவித்துள்ளார்.

நகரத்தின் பிரதான ரயில் நிலையம் அருகே உள்ள தைபே மெயின் சுரங்கப்பாதை நிலையத்தில் அந்த நபர் திடீரென்றுப் புகை குண்டுகளை வீசியதால், பாதசாரிகள் சிதறி ஓடினர்.
அந்த நபர் பின்னர் சுரங்கப்பாதையில் இன்னொரு நிறுத்தம் வரையில் பயணித்து, நிலையத்திலிருந்து வெளியேறி, தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நால்வர் ஆபத்தான நிலையில்
அவர் ஒரு கத்தியை கையில் எடுத்துக்கொண்டு பாதசாரிகள் மீது வீசி, பின்னர் ஒரு கடைக்குள் ஓடினார், இதனால் மக்கள் அலறினர். வெளியான தகவலின் அடிப்படையில், அந்த நபரால் 9 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபரின் பின்னணி குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக தைவான் பிரதமர் சோ ஜுங்-டாய் தெரிவித்தார்.
மட்டுமின்றி, தைவான் முழுவதும் உள்ள ரயில் மற்றும் சுரங்கப்பாதை நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |