லண்டனை உலுக்கிய பூ விற்பனையாளர் கொலையில் முக்கிய திருப்பம்: சிக்கிய இளைஞரின் அதிர்ச்சி பின்னணி
லண்டனில் பட்டப்பகலில் பூ விற்பனையாளர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான இளைஞர், அவரின் முன்னாள் காதலியின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
வடக்கு லண்டனில் கடந்த சனிக்கிழமை பட்டப்பகலில் Tony Eastlake(55) என்ற பூ விற்பனையாளர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், 21 வயதான James Peppiatt என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.
James Peppiatt என்பவர் கொல்லப்பட்ட Tony Eastlake-ன் முன்னாள் காதலியின் மகன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tony Eastlake-கும் James Peppiatt-ன் தாயாருக்கும் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆனால் ஏப்ரல் 1ம் திகதி James Peppiatt-ன் தாயார் மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண்மணி எவ்வாறு மரணமடைந்தார் என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது Tony Eastlake கொலை வழக்கில் சிக்கியுள்ள James Peppiatt ஜூன் 7ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விரிவான விசாரணைக்கு பின்னரே, பூ விற்பனையாளரின் கொலைக்கு காரணம் தெரிய வரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் லங்காசிறி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...