நேற்று டோனி! இன்று கோலி... நடுவரிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், கோலி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிளே ஆப் சுற்றின் இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் ஆடி வரும் கொல்கத்தா அணி சற்று முன் வரை 13.5 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
https://t.co/R8xYzX3Rta pic.twitter.com/aGgXJEbt65
— ✨ᕼ??мάn ?? ?✨ (@Satti45_) October 11, 2021
இப்போட்டியில் ஆட்டத்தின் 6.6-வது பந்தை சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் வீசிய போது, கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ஆன, ராகுல் திரிபாட்டி அடித்து ஆட முற்பட்டார்.
ஆனால், பந்தானது அவரது கால்காப்பில் பட்டதால், உடனே இது குறித்து எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது. நடுவர் அவுட் இல்லை என்று கூற, உடனே கோலி ரிவ்யூ எடுத்தார். அதில், தெளிவாக அழகான அவுட் என்பது தெரிந்தது.
— Sunaina Gosh (@Sunainagosh7) October 10, 2021
உடனே மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க, கோலி நடுவரிடம் இது குறித்து ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதே போன்று நேற்றைய ஆட்டத்தின் பிராவோ வீசிய ஓவரின் போது, நடுவர் வைட் கொடுத்ததன் குறித்து டோனி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலானது குறிப்பிடத்தக்கது.