ரோஹித் 155, கோஹ்லி 131 ரன் விளாசல்! இளம் வீரர்களுக்கு சவால் ஆட்டம்
விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி இருவரும் சதம் விளாசினர்.
கோஹ்லி அபாரம்
பெங்களூருவில் நடந்த போட்டியில், ரிக்கி பூய் 122 ஓட்டங்கள் விளாச ஆந்திரா அணி 298 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரியனாஷ் ஆர்யா 44 பந்துகளில் 74 ஓட்டங்கள் ஆட்டமிழக்க விராட் கோஹ்லி (Virat Kohli) அதிரடியில் மிரட்டினார்.
அவருடன் கைகோர்த்த நிதிஷ் ராணாவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, டெல்லி அணி 37.4 ஓவர்களில் 300 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கோஹ்லி 101 பந்துகளில் 131 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 14 பவுண்டரிகள்), நிதிஷ் ராணா 55 பந்துகளில் 77 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) குவித்தனர்.

ரோஹித் சரவெடி ஆட்டம்
அதேபோல் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் சிக்கிம் மற்றும் மும்பை அணிகள் மோதின. முதலில் ஆடிய சிக்கிம் 236 ஓட்டங்கள் எடுத்தது. ஆஷிஷ் தாபா 79 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) வாணவேடிக்கை காட்டினார். ரகுவன்ஷி 38 ஓட்டங்களில் அவுட் ஆக, ரோஹித் ஷர்மா சதம் விளாசினார்.

மொத்தம் 94 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித், 9 சிக்ஸர் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 155 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
முஷீர் கான் 27 ஓட்டங்கள் எடுக்க, மும்பை அணி 30.3 ஓவர்களில் 237 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே கிண்ணத் தொடரின் தொடக்கத்திலேயே, இளம் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரோஹித், கோஹ்லி சதம் அடித்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |