தேவையான நேரத்தில் அவுட்டாகிவிட்டேன்! கடும் கோபத்தில் பேட்டால் சேரை அடித்த கோஹ்லியின் வீடியோ
ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆட்டமிழந்த கோஹ்லி, கோபத்தில் சேரை பேட்டால் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்ற வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் பெங்களூரு அணியும், டேவிட் வார்னரின் ஹைதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் பெங்களூரு அணி 149 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், அதை எட்டிப்பிடிக்க முடியாமல் ஹைதராபாத் அணி 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 6 ஓட்டங்கள் வித்தியாசாத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இப்போட்டியில் கோஹ்லி ஆரம்பத்தில் இருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Kohli frustrated with himself ??#RCBvsSRH #ViratKohli #IPL #IPL2021 pic.twitter.com/QS1tiKIQLo
— Abhilash Kumar (@AbhilashK95) April 14, 2021
இதனால் அணியின் எண்ணிக்கையும் ஆமை வேகத்தில் சென்றது. கோஹ்லி அடித்து ஆட முற்பட்டாலும்,ரஷித் கான் மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர்.
இதனால் ரன் ரேட்டை அதிகரிக்கும் நோக்கில் 13 ஆவது ஓவரில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தை சிக்சருக்கு அடிக்க முயற்சித்த கோஹ்லி டாப் எட்ஜ் ஆகி லெக் சைடில் இருந்த விஜய்சங்கர் கையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அணிக்கு ரன்கள் தேவை என்ற முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்த கோஹ்லி, அந்த கோபத்தை, வெளியே செல்லும் போது, பவுண்டரி லைனைக் கடந்து வீரர்கள் அமரும் சேர் மீது காட்டினார்.
அதை தனது பேட்டால் அடித்து விட்டு உள்ளே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.