சோகத்தில் இருந்த ரோஹித் சர்மா; ஆக்ரோஷமாக கொண்டாடிய கோலி - வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி, நேற்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
MI vs RCB
வான்கடே மைதானத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணியை பெங்களூரு வீழ்த்தியுள்ளது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, 221 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி, 42 பந்துகளில் 67 ஓட்டங்களும், ரஜத் படிதார் 32 பந்துகளில் 64 ஓட்டங்களும் குவித்தனர்.
222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 12 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தனர்.
17வது ஓவரில் திலக் வர்மாவும், 18வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் அடுத்தது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
கொண்டாடிய கோலி
கடைசி ஓவரில் வெற்றி பெற 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், குர்னால் பாண்டியாவின் சுழற்பந்து வீச்சில் மிட்செல் சான்டனர், தீபக் சஹார் மற்றும் நமன் திர் ஆகியோர் அடுத்தது ஆட்டமிழந்தனர். பெங்களூர் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்த போது, அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சோகத்தில் இருந்தனர்.
— . (@kohlislays) April 7, 2025
அதேவேளையில் 19.5 ஓவரில் நமன் திர் ஆட்டமிழந்த போது, 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில், மும்பையை வென்றதை விராட் கோலி ஆக்ரோஷமாக மைதானத்தில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |