குமார் சங்ககாராவின் இமாலய சாதனையை முறியடித்த கோஹ்லி
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சங்ககாராவை பின்னுக்குத் தள்ளி விராட் கோஹ்லி இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
விராட் கோஹ்லி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) தனது 75வது அரைசதத்தை பதிவு செய்தார். 
இதன்மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
14,234 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை (Kumar Sangakkara) பின்னுக்குத் தள்ளினார் கோஹ்லி.
அதிலும் குறிப்பாக சங்ககாரா 404 போட்டிகள் விளையாடிய நிலையில், விராட் கோஹ்லி 305 போட்டிகளிலேயே 14,243 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 51 சதங்கள் அடங்கும். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |