சூர்யகுமார் ஏன் உலகின் சிறந்த வீரர் என்பதற்கான காரணம் இதுதான்: விராட் கோலி
மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தியுள்ளதாக விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
அதிவேக சதம்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ஓட்டங்கள் விளாசினார். இதனால் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.
டி20 உலகக்கோப்பையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், தற்போது நியூசிலாந்து தொடரிலும் அதனை தொடர்கிறார்.
@AFP
வீடியோ கேம் ஆட்டம்
இந்த நிலையில், சூர்யகுமாரின் ஆட்டம் குறித்து விராட் கோலி வியந்து பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'சூர்யகுமார் யாதவ் ஏன் உலகில் சிறந்த வீரராக இருக்கிறார் என்பதை இந்த ஆட்டம் காட்டுகிறது.
இதை நான் நேரலையில் பார்க்கவில்லை, ஆனால் இது அவருடைய மற்றொரு வீடியோ கேம் இன்னிங்ஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
@PTI