மனைவியின் பிரசவத்துக்காக ஊர் திரும்பிய கோஹ்லி! அதற்கு முன்னர் தமிழன் நடராஜனிடம் அவர் சொன்ன விடயம்
இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி படுதோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அவுஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு திரும்பினார்.
அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று விமான நிலையம் செல்லும் முன் கோஹ்லி இந்திய அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முக்கியமாக நடராஜன், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் வலைப்பயிற்சியில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது குறித்தும் கோஹ்லி சில விடயங்களை பேசினார். இதில் நடராஜனுக்கு கோலி தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கினார்.
நடராஜன் வலைப்பயிற்சியில் சிறப்பாக கோஹ்லி சொன்னபடியே பவுலிங் செய்து வருகிறார். ஆனால் இவருக்கு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாது, வலைப்பயிற்சியில் மட்டுமே பவுலிங் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.