சங்ககாரா, தில்ஷனின் அபார சாதனையை சமன் செய்த கோஹ்லி-ரோஹித்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இரண்டாவது கூட்டணி என்ற சாதனையை ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி படைத்துள்ளனர்.
கோஹ்லி, ரோஹித்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி (Virat Kohli) 120 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்கள் குவித்தார். 
ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 51 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்கள் எடுத்தார். இந்த கூட்டணி 136 ஓட்டங்கள் (109 பந்துகள்) குவித்தது.
இதன்மூலம் 20 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 100 பார்ட்னர்ஷிப் அமைத்த குமார் சங்ககாரா (Kumar Sangakkara), தில்லகரத்னே தில்ஷன் (Tillakaratne Dilshan) ஆகியோரது சாதனையை சமன் செய்தனர். 
அதே சமயம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் ரோஹித், கோஹ்லி கூட்டணி உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் சௌரவ் கங்குலி (Sourav Ganguly) கூட்டணி 26 முறை 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதலிடத்தில் உள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |