இந்த ஐபிஎல் துரதிர்ஷ்டம், ஏமாற்றம் ஆனால்..விராட் கோலியின் உருக்கமான பதிவு
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பெங்களூரு அணியின் தோல்வி
தோல்விக்கு பின்னர் பெங்களூரு அணி வருத்தமும், நன்றியும் கூறி பதிவிட்டது. மேலும் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும் கோலி அற்புதமாக விளையாடி சதமடித்ததாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
AFP
இந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி தோல்வி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோலி உருக்கம்
அதில், 'சில தருணங்களைக் கொண்ட ஒரு சீசன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இலக்கை அடையவில்லை. ஏமாற்றம், ஆனால் நாம் தலையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். எங்கள் விசுவாசமான ஆதரவாளர்களுக்கு, ஒவ்வொரு அடியிலும் எங்களை ஆதரித்ததற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
கோலியின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் மற்றும் நன்றி கூறி வருகின்றனர். ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடக்கும் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
A season which had it's moments but unfortunately we fell short of the goal. Disappointed but we must hold our heads high. To our loyal supporters, grateful for backing us every step of the way. pic.twitter.com/82O4WHJbbn
— Virat Kohli (@imVkohli) May 23, 2023