மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து குதித்த நோயாளி: திக் திக் நிமிடத்தின் பரபரப்பு காட்சி
கொல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு இருந்த சுதிர் அதிகாரி என்ற மனநோயாளி மருத்தவமனையின் எட்டாவது தளத்தில் இருந்து குதித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மனநோயாளி சுதிர் அதிகாரி(Sudhir Adhikari)சனிக்கிழமை காலை எப்படியோ மருத்துவமனையின் 8வது மாடியில் உள்ள சன்னல் வழியாக வெளியே வந்து, தளத்தின் நுனிப் பகுதியில் வந்து அமர்ந்துள்ளார்.
இதனை உடனடியாக கண்டறிந்த மருத்துவமனை நிர்வாகம், பொலிஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.
Kolkata, West Bengal | A patient has climbed out of a ward to sit on a highrise edge of the Institute of NeuroScience Hospital and is showing unwillingness to get down. Hydraulic ladder is reportedly being brought to bring him down pic.twitter.com/QWRhyhbhxq
— ANI (@ANI) June 25, 2022
இதுத் தொடர்பான வீடியோவை காண்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்: எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளி பரபரப்பு வீடியோ
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சுதிர் அதிகாரியை கீழே இறங்கி வருமாறு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர், அவரை ஹைட்ராலிக் ஏணிகள் கொண்டு காவல்துறை காப்பாற்ற முயன்ற போது எல்லாம் கீழே குதித்துவிடுவது போன்ற அச்சுறுத்தலை அங்குள்ளவர்களுக்கு ஏற்படுத்தினார்.
சுதிர் குதிப்பதற்கான காரணம் ஏதும் இறுதிவரை அவர் சொல்லாத நிலையில், மதியம் 1 :10 மணியளவில் மருத்துவமனையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்தார்.
இதில் அவருக்கு மண்டை ஓடு, விலா எலும்புகள் மற்றும் இடது கை ஆகியவை பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை சுற்றி இருந்த பொதுமக்கள் மற்றும் சுதர் குடும்பத்தினர் என அனைவரும் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் மருத்துவமனையின் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததை பார்த்து அவரது குடும்பத்தினர் மனம் உடைந்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போரில் புடின் வெற்றி... உலகத்தின் வருங்கால ஆபத்து: பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் முதன்மை கதவு மூடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.