உக்ரைன் போரில் புடின் வெற்றி... வருங்காலத்திற்கான உலகின் ஆபத்து: பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!
எந்தவொரு சாதகமும் இல்லாத அமைதி பேச்சுவார்த்தைக்குள் உக்ரைன் தள்ளப்படலாம் என தாம் நினைப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 122வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போர் தாக்குதலில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா ஆயுதங்கள் மற்றும் உளவுத் துறை அறிக்கைகள் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும் ரஷ்யாவிற்கு எதிராக பல அடுக்கு பொருளாதார தடையையும் பிரித்தானிய அரசாங்கம் அடுத்தடுத்து விதித்து வருகிறது.
#Ukrainians may begin to be forced into an unfavorable "peace treaty" for them, #British Prime Minister Boris Johnson believes. However, if Putin achieves his goals, it will threaten the world in the future. pic.twitter.com/uFqkoBxz5F
— NEXTA (@nexta_tv) June 25, 2022
இந்தநிலையில், உக்ரைனுக்கு எந்தவொரு சாதகமும் இல்லாத ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வலுக்கட்டாயமாக தள்ளப்படலாம் என நினைப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 5 வயது சிறுவனை சூடான காரில் விட்டுச் சென்ற தாய்: அமெரிக்காவில் அரங்கேறிய சோகம்!
மேலும் இந்த போரில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது இலக்குகளில் வெற்றி பெற்றால், அது இந்த உலகத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.
REUTERS