5 வயது சிறுவனை சூடான காரில் விட்டுச் சென்ற தாய்: அமெரிக்காவில் அரங்கேறிய சோகம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமண்டா மீன்ஸ் (36) என்ற தாய், தனது குழந்தையை காரில் மறந்து விட்டுச்சென்றதை அடுத்து, காரில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாக 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமண்டா மீன்ஸ்(36) என்ற அமெரிக்க தாய், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காரை விட்டுச்சென்ற நிலையில், காரின் பின் இருக்கையில் கட்டப்பட்டு இருந்த தனது மகன் டரேஸ்-யை(5) Trace மறந்து வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரது மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்ட அமண்டா மீன்ஸ்(Amanda Means), கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்தே மகன் Trace-யை காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.
அப்போது தான் தனது 5வயது மகன் காரின் பின் இருக்கையில் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்த அமண்டா மீன்ஸ், உடனடியாக காருக்கு ஓடி சென்று பார்த்த போது அவரது 5 வயது மகன் Trace சுயநினைவு இன்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன்பின் அவசர சிகிச்சையை அழைத்து, Trace மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, அவரின் பூட்டப்பட்ட காரில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாக சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் இறந்த தினத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 37C வெப்பநிலை இருந்தது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், தவறுதலாக சிறுவனை காரில் விட்டு சென்றதே உயிரிழப்பு காரணம் என தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் போலந்து வீரர்கள் 80 பேர் இனி இல்லை: குறிவைத்து தாக்கிய ரஷ்யா
இருப்பினும் சிறுவனின் தாயார் மீது எந்தவொரு வழக்கும் பதியாத பொலிஸார், விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.