உக்ரைனில் போலந்து வீரர்கள் 80 பேர் இனி இல்லை: குறிவைத்து தாக்கிய ரஷ்யா
உக்ரைனில் போரில் ஈடுபட்டு வந்த 80 போலந்து வீரர்களை ரஷ்ய ராணுவம் அழித்து இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 122வது நாளாக தொடரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, தற்போது கிழக்கு உக்ரைனிய பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் தீவிரமடைந்துள்ளது.
ரஷ்யாவின் இந்த அத்துமீறிய போர் தாக்குதலை பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன் மட்டுமில்லாமல் உக்ரைனுக்கு தேவையான பல மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது.
மேலும் ரஷ்யாவின் ஆத்துமீறல்களை எதிர்த்து பிரித்தானியா போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த படைவீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் குதித்தனர்.
இந்தநிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் ரஷ்யா நடத்திவரும் இந்த போர் தாக்குதலில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய போலந்து வீரர்கள் 80 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவற்றில் 20 ஆயுதமேந்திய கவச வாகனங்கள், மற்றும் எட்டு எட்டு ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தாக ரஷ்ய செய்தி நிறுவனமான RIA மேற்கோள் காட்டியுள்ளது.
இந்த தாக்குதல் தொழிற்சாலை நகரம் கான்ஸ்டான்டினோவ்காவில் உள்ள மெகாடெக்ஸ் ஜிங்க் ஆலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இரவுநேர கேளிக்கை விடுதியில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு: பெருமை திருவிழா ரத்து!
மேலும் கொல்லப்பட்ட 80 போலந்து வீரர்களை ரஷ்யா கூலிப்படையினர் என குற்றம்சாட்டியுள்ளது.