உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும் கொள்ளு துவையல்: செய்வது எப்படி?
பருப்பு வகைகளில் கொள்ளும் ஒன்று. இந்த கொள்ளுப் பருப்பை நன்றாக ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர், கெட்ட கொழுப்பு வெளியேறும்.
சரி உடல் எடையை கிடுகிடுவென குறைக்க கொள்ளு துவையல் எப்படி செய்யலாம் என்று பார்ப்பாம் -
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 4 கைப்பிடி
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
தேங்காய் - அரை மூடி
சிவப்பு மிளகாய் - 9
பூண்டு - 10 பல்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதல் நாள் இரவே கொள்ளு பருப்பை ஒரு பாத்திரத்தில் நன்று ஊற வைத்து விட வேண்டும்.
மறுநாள் அந்த கொள்ளுவை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் லேசான எண்ணெய் ஊற்றி கொள்ளுப் பருப்பை போட்டு வாசம் போகும் வரை வதக்குங்கள்.
பின்னர், பூண்டு, தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய் அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் லேசான நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்து வைத்த கொள்ளு கலவை கலந்து இறக்கினால் சுவையான கொள்ளு துவையல் ரெடி.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த கொள்ளு துவையலை சாப்பிட்டு வந்தீர்கள் என்றால், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வெளியேறும். உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |