ரூ.50,000 -க்கும் குறைவான விலையில் 150 Km செல்லும் Electric Scooter..., என்ன மொடல் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களில் ஒன்றான கோமகி (Komaki), 2 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
2 புதிய Electric Scooter அறிமுகம்
கோமகி (Komaki) நிறுவனமானது கோமகி எக்ஸ்-ஒன் ப்ரைம் (Komaki X-ONE Prime) மற்றும் கோமகி எக்ஸ்-ஒன் ஏஸ் (Komaki X-ONE Ace) என்ற 2 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், 2-2.2 kWh Lithium ion battery பொருத்தப்பட்டுள்ளன. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் முதல் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.
இந்த Range ஆனது நகரங்களில் தினமும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும். இதில் நவீன வசதிகளாக Regenerative braking மற்றும் Auto repair ஆகிய வசதிகள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், ஸ்கூட்டரில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தானாகவே சரிசெய்து கொள்ளும். மேலும் இதில், Parking assist, reverse assist, cruise control, digital instrument cluster மற்றும் LED lights ஆகியவை உள்ளன.
இந்த நிறுவனமானது, சூப்பர் மெட்டல் க்ரே, கார்னெட் ரெட், ஜெட் பிளாக் மற்றும் ஃப்ராஸ்ட் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்களையும் (Colour Option) வழங்கியுள்ளது.
இதன் விலையை பொறுத்தவரை கோமகி எக்ஸ்-ஒன் ப்ரைம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.49,999 ஆகவும், கோமகி எக்ஸ்-ஒன் ஏஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.59,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை Ex Showroom விலையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |