ஒரு முறை சார்ஜ் செய்தால் 322 கிமீ செல்லலாம்.., புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 322 கிமீ பயணிக்க கூடிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கோமகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Electric scooter அறிமுகம்
இந்தியாவில் எலக்ட்ரிக் இருச்சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் Komaki Electric நிறுவனமானது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
XR7 என்ற பெயரில் புதிய Electric Scooter அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் Ex-showroom விலை ரூ.89,999 ஆகும்.
இந்த ஸ்கூட்டரானது Automatic வசதிகள் மற்றும் வயர்லெஸ் (Wireless) வசதிகள் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், Disc brakes, 3000-watt BLDC electric motor மற்றும் wireless controller உள்ளன. அதோடு, Lithium-Phosphate (Lipo4) Battery பொருத்தப்பட்டுள்ளது.
இதனை ஒரு முறை ஜார்ஜ் செய்தால் 322 கிமீ பயணிக்கலாம். இந்த பேட்டரி ஆனது 3000- 5000 முறை சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |