பிரீமியம் போன்களுக்கு ரூ.12,000 தள்ளுபடி வழங்கிய சாம்சங் நிறுவனம்
சாம்சங் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய போன்களான Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 மற்றும் Galaxy Z Flip 7 FE ஆகியவற்றிற்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கியுள்ளது.
மிகப்பெரிய சலுகை
சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ e store-ல் மிகப்பெரிய வங்கி தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ்கள் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகைகள் காரணமாக, இந்த பிரீமியம் மடிக்கக்கூடிய போன்களை முன்பை விட மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும்.
Galaxy Z Fold 7 அல்லது Galaxy Z Flip 7 வாங்க விரும்புபவர்களுக்கு, HDFC மற்றும் Axis Bank கிரெடிட் கார்டுகள் மூலம் முழு கட்டணத்தையும் செலுத்தினால் ரூ.12,000 தள்ளுபடி கிடைக்கும்.
அதே நேரத்தில், Galaxy Z Flip 7 FEக்கு ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, 24 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI விருப்பமும் கிடைக்கிறது.
மேலும், பழைய போனை மாற்றினால், ரூ.12,000 upgrade bonus மற்றும் பழைய போனின் exchange value கிடைக்கும். இருப்பினும், வங்கி தள்ளுபடி மற்றும் upgrade bonus-யை ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், பழைய போனின் மதிப்பு அதன் நிலையைப் பொறுத்தது.
இதனுடன், Samsung Axis Bank credit card பயனர்களுக்கு EMI மற்றும் EMI அல்லாத பரிவர்த்தனைகளில் 10% cashback வழங்கப்படும்.
சலுகைகளுக்குப் பிறகு போன்களின் புதிய விலைகள்
- Galaxy Z Flip 7: ரூ.97,999
- Galaxy Z Flip 7 FE: ரூ.85,999
- Galaxy Z Fold 7: ஆரம்ப விலை 1,74,999
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |