முழு சார்ஜில் 100 கிமீ தூரம்.., ரூ.53,000க்கும் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் (Komaki Electric Vehicles) நிறுவனமானது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொடலை அறிமுகம் செய்துள்ளது.
Komaki X3 Electric Scooter
கோமகி எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் (Komaki Electric Vehicles) நிறுவனமானது, Komaki X3 Electric Scooter என்னும் மொடலை விற்பனை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ரூ.52,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த ஸ்கூட்டரில் உயர் செயல் திறன் கொண்ட Lithium-ion battery பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் திரை மற்றும் பன்முக ரைடிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் Disc brakes, Smart Assist, Parking Repair Assist, Reverse Assist ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இதில் 3000 W திறன் கொண்ட Hub motor உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். ஓர் முழு சார்ஜில் 75 கிமீ முதல் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதில் முக்கியமாக விடயம் என்னவென்றால் இந்த ஸ்கூட்டரை நாம் இரண்டாக வாங்கினால் ரூ. 99,999க்கே வாங்கிக் கொள்ள முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |