1400 ஆண்டுகளாக தாக்குப்பிடிக்கும் உலகின் பழமையான நிறுவனம்... என்ன பிசினஸ் நடக்குது தெரியமா?
1400 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் பழமையான நிறுவனத்தில் நடக்கும் தொழிலை பற்றி பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் எந்தவொரு தொழில் தொடங்கினாலும் அதற்கு உழைப்பும் பொறுமையும் மிகவும் அவசியம். ஆனால், சில நிறுவனங்கள் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மூடப்படுகின்றன. இருந்தாலும், பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து இருக்கும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு நிறுவனம் தான் ஜப்பானில் உள்ள கட்டுமான கம்பெனியான கோங்கோ குமி கோ லிமிடெட். (Kongo Gumi Co). இந்த நிறுவனம் கிமு 578 -ம் ஆண்டுலேயே தொடங்கப்பட்ட புராதான கம்பெனியாகும். இது ஜப்பானில் உள்ள ஓசாகா நகரத்தில் இயங்கி வருகிறது.
Kongo Gumi Co நிறுவனம்
பல நூற்றாண்டுகளாக Kongo Gumi Co நிறுவனம் எப்படி நீடித்து நிலைத்துள்ளது என்பதற்கான ரகசியத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், 2006 -ம் ஆண்டில் போட்டியின் காரணமாக டாகாமாட்சு கன்ஸ்ட்ரக்ஷன் குரூப்பின் துணை நிறுவனமாக மாறியது.
இந்நிறுவனமானது, டிசைன், கன்ஸ்ட்ரக்ஷன், சீரமைப்பு, ஆலயங்களை செப்பனிடுதல், கோயில்கள், மாளிகைகள், கலாசார கட்டடங்கள் தொடர்பான கட்டடக்கலையில் நிபுணத்துவம் கொண்டது இது துணை நிறுவனமாக மாறினாலும் பழங்கால முறைகளை இன்னும் மாற்றாமல் உள்ளது.
பௌத்த கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டங்களை செப்பனிடுவதிலும், கான்கிரீட்டையும் மரத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி ஆலயங்களைக் கட்டுவதிலும் முக்கியமாக செயல்படுகிறது.
Shutter stock
குறிப்பாக, இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 ஆண்டுகள் வெறும் பயிற்சி மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும் பயிற்சி காலத்தில் யார் சிறப்பான நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றனர் என்பதை கண்டறிய போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த பயிற்சி தான் Kongo Gumi Co நிறுவனம் பல நூற்றாண்டுகளாக நீடித்து நிலைப்பதற்கு முக்கிய காரணமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |