நிரந்தரமாக கருவளையத்தை நீக்க உதவும் கொரியன் பேக்.., எப்படி தயாரிப்பது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், கருவளையத்தை நீக்க உதவும் கொரியன் பேஸ்பேக்கை வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள், தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
கைவிடாமல் 10 நிமிடம் நன்கு கலந்தால் மென்மையான பேஸ்ட் போல் ஒரு கலவை கிடைக்கும்.

அடுத்து இதனை கண்களுக்கு கீழே தடவி இரவு முழுக்க அப்படியே விடவும்.
இதற்கடுத்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கண்களை கழுவிக்கொள்ளலாம்.
இந்த கொரியன் பேக்கை தினமும் தொடர்ந்து பயன்படுத்தி வர கருவளையத்தை இயற்கையாக நிரந்தரமா நீக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |