மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம் நடிகை: பொலிஸார் தீவிர விசாரணை
கேரளாவில் மாடல் மற்றும் நடிகையாக அறியப்பட்ட சஹானா அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த சஹானா(20) கோழிக்கோடு பகுதியில் உள்ள பரம்பில் பஜார் பகுதியில் தனது கணவருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் தமிழ் திரைப்படம் மற்றும் பல்வேறு விளம்பங்களில் நடித்துள்ள நிலையில் இவர் வெள்ளிக்கிழமையான இன்று அவரது வீட்டில் உள்ள சன்னல் கம்பியில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்து கிடந்துள்ளார்.
நடிகை சஹானாவிற்கும், அவரது கணவர் சஜ்ஜாத்திற்கும் திருமணமாகி 1 வருடமே ஆகியிருக்கும் நிலையில், சஹானா மர்மமான முறையில் இறந்து இருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மாணவியை அடித்துக் கொன்று எரித்த சக மாணவர்கள்: நைஜீரியாவில் பெரும் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து அவரது கணவர் சஜ்ஜாத்திடம் கேரள பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.