மாணவியை அடித்துக் கொன்று எரித்த சக மாணவர்கள்: நைஜீரியாவில் பெரும் பரபரப்பு
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் மதம் சார்ந்த எதிர் கருத்தை தெரிவித்ததற்காக பள்ளி மாணவியை சக மாணவர்கள் அடித்து கொன்று எரித்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான சோகோடோவில் உள்ள பள்ளியில், மாணவி ஒருவர் குறிப்பிட்ட மதம் குறித்த எதிர் கருத்தை வாட்ஸ-ஆப்பில் தெரிவித்ததற்காக குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சக மாணவர்களால் அடித்துக் கொன்று எரிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த மாநில அரசின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், குற்றவாளி டெபோரா சாமுவேல் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்த விவரங்களில், பள்ளி மாணவர்களுக்கான வாட்ஸ-ஆப் குழுவில், குறிப்பிட்ட மதங்களை சேர்ந்த மாணவர்கள் அவர்களது மதம் சார்ந்த பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டதால், அதனை பாதிக்கபட்ட மாணவி எதிர்த்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஒளிந்து இருந்த மாணவியை தரதரவென இழுத்து வந்து, கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்துள்ளனர், அவரை பின் தீயிட்டு எரித்தும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலகின் மதிப்புமிக்க நிறுவனம்: ஆப்பிள் தொழில்நுட்பத்தை பின்னுக்குத் தள்ளிய அரோம்கோ
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை களைக்க கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தியதாகவும், பின்னர் வானத்தை பார்த்து துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தனர், ஆனால் அதனை மாணவர்கள் தடுத்து அந்த பெண்ணின் மிதான தாக்குதலை தொடர்ந்ததால் மாணவியை பரிதாபமாக இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.