உலகின் மதிப்புமிக்க நிறுவனம்: ஆப்பிள் தொழில்நுட்பத்தை பின்னுக்குத் தள்ளிய அரோம்கோ
சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான அரோம்கோ, உலகின் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
இந்தாண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை அடைந்த ஆப்பிள் நிறுவனம் உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
ஆனால் கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு மக்கள் வழக்கமான வாழ்க்கை நடைமுறைக்கு மாறியதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர்.
இதன்முலம் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.37 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
இதையடுத்து தற்போது நடைப்பெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போரினால் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் உற்பத்தியை முக்கிய உலக நாடுகள் நிறுத்தியதை தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் பொருள்களின் விலையை பிற எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கின.
இதன்முலம் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான அரோம்கோவின் சந்தை மதிப்புகள் மளமளவென உயர்ந்து 2.43 டிரில்லியன் என்ற சந்தை மதிப்பை அடைந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய சொத்துகளை விடுவித்துள்ள சுவிஸ் அரசாங்கம்:சொத்து முடக்கம் முக்கிய நடவடிக்கை அல்ல என அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, தற்போது உலகின் மதிப்புமிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான அரோம்கோ உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.