கோயம்புத்தூர் முதல் கோடீஸ்வரர் வரை! சாதாரண மில்லில் தொடங்கி பணத்தில் புரளும் இந்த மனிதர் யார்?
கோயம்புத்தூரில் தொழிலை தொடங்கிய நபர் ஒருவர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் பணக்காரர் ஆன கதையை பற்றி பார்க்கலாம்.
யார் இவர்?
ஈரோடு மாவட்டம், கல்லியம்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவர் கே.பி.ராமசாமி (KP Ramasamy). இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு வேலைக்கு செல்லாமல், தொழில் தொடங்கி பலருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருந்தார்.
வீட்டின் மூத்த மகன் என்பதால் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 1984 -ம் ஆண்டு கோயம்புத்தூரில் நான்கு விசைத்தறி இயந்திரங்களுடன் கே.பி.ஆர் மில்ஸ் (KPR Mill) தொடங்கினார். அப்போது, நூல், துணி, ஆடைகள் என அடுத்தடுத்து தனது தொழிலை விரிவுபடுத்தினார்.
தற்போது இந்த மில்லில் இருந்து ஒரு வருடத்திற்கு 15 கோடி ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. 2019 -ம் ஆண்டில் ஃபாஸோ என்ற ஆண்கள் உள்ளாடை பிராண்டை அறிமுகம் செய்தது.
குறிப்பாக, இங்கு அனைத்து விதமான ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு 6,000 கோடி
H&M, Marks and Spencer and Walmart ஆகியவற்றில் கே.பி.ஆர் மில்ஸின் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.
பின்னர், 2013 -ம் ஆண்டில் சர்க்கரை ஆலையையும் கே.பி.ராமசாமி தொடங்கினார். தற்போது, கேபிஆர் குழும நிறுவனங்கள் ஆண்டுக்கு 6,000 கோடி வருவாய் ஈட்டுகின்றன.
இதுமட்டுமல்லாமல், தனது ஆலைகளில் பணிபுரிபவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து வருகிறார். அதிலும், பெண்கள் 27000 பேருக்கு இலவசமாக கல்வி கொடுத்ததால் 12ஆம் வகுப்பு பயின்று உயர் படிப்புகளுக்கும் சென்றுள்ளனர். இவரை, அன்போடு அப்பா என்றே அழைக்கின்றனர்.
அதோடு, கோவையில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி மற்றும் கேபிஆர் அறக்கட்டளை நிறுவியுள்ளார். தற்போது அதன் மூலம் மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |