நடிகை பிந்துகோஷை கைவிட்ட மகன் - உதவிக்கரம் நீட்டிய KPY பாலா
உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்படும் நடிகை பிந்துகோஷுக்கு KPY பாலா பண உதவி செய்துள்ளார்.
நடிகை பிந்துகோஷ்
1982 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான 'கோழி கூவுது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிந்துகோஷ்.
இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
80களில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த இவர், கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்தமகன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
தற்போது 2வது மகன் மட்டுமே கவனித்து வரும் நிலையில், மருத்துவச்செலவுக்கே ரூ.10,000 செலவாகுவதாகவும், இதனால் அவரின் மகன் கஷ்டப்படுவதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது.
KPY பாலா உதவி
தொடர்ந்து இவரை சந்தித்த நடிகை ஷகீலா பிந்துகோஷுக்கு உதவுமாறு காணொளி மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் KPY பாலா, நடிகை ஷகீலாவுடன் நேரில் சென்று பிந்துகோஷுக்கு ரூ.80,000 வழங்கியுள்ளார்.
மேலும் பணம் தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |