போலந்து தீவிர வலதுசாரி நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு: 9 பேரை கொன்ற தாக்குதல்தாரி உயிரிழப்பு
Krakow Shooting Far right Gunman accused died in hospital: போலந்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய நபர் காவல்துறை அதிகாரி சுட்டதில் காயமடைந்து இருந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
போலந்து அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவம்
போலந்து நாட்டின் கிராகோவ்(Krakow) நகரின் முதன்மை சதுக்கத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் 25 வயதுடைய தீவிர வலதுசாரி நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இராணுவ சீருடை மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஊடுருவாத கவச உடைகளை அணிந்து கருப்பு நிற காரில் வந்த தாக்குதல்தாரி நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரித்தானிய குடிமகன் உட்பட 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல்தாரியை கட்டுப்படுத்த அவர் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரியும் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் கிராகோவ் நகரில் இருந்து மேற்கே 160 கிலோமீட்டர் வடகிழக்கே Ostrowiec Swietokrzysk அமைந்துள்ள தாக்குதல்தாரியின் வீட்டை காவல்துறை அதிகாரிகள் பரிசோதித்த போது தாக்குதல்தாரியின் குடும்ப உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.

தாக்குதல்தாரி உயிரிழப்பு
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாக்குதல்தாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து உள்துறை அமைச்சர் மாசின் கெர்வின்கி வெளியிட்ட கருத்தில், தாக்குதல்தாரி தீவிரவாத எண்ணங்கள் கொண்டிருந்ததாகவும், அவர் தீவிர வலதுசாரி சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான பின்னணியை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.