உக்ரேனியத் தாக்குதல்களால் அவசரநிலையை அறிவித்த பிராந்தியம்
Krasnodar region declares state of emergency: தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடார் பிராந்தியம் அவசரநிலையை அறிவித்துள்ளது.
உக்ரைனின் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து ரஷ்யாவின் கிராஸ்னோடார் பிராந்தியம் அவசரநிலையை அறிவித்துள்ளது.
உக்ரைன் கடுமையான தாக்குதல்கள்
பல வாரங்களாக கருங்கடல் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்கட்டமைப்பு மீது உக்ரைன் கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

இதன் விளைவாக ஏற்றுமதி பாதைகள் முடங்கியுள்ளது மற்றும் உள்ளூர் பண்ணைகளில் விற்கப்படாத தானியங்கள் நிரம்பி வழிகின்றன என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கிராஸ்னோடார் பிராந்தியம் அவசரநிலையை அறிவித்துள்ளது. ஆளுநர் வெனியாமின் கொன்ட்ராட்யேவ் புதன்கிழமை அன்று இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
இந்த ஆணை, "தளவாட வசதிகள் மீதான பெரும் தாக்குதல்கள், துறைமுக செயல்பாடுகள் நிறுத்தம் மற்றும் அசோவ்-கருங்கடல் படுகையில் கப்பல் போக்குவரத்து சீர்குலைவு" ஆகியவற்றை இந்த அவசர நடவடிக்கைகளுக்கான காரணமாக குறிப்பிடுகிறது.