ரஷ்யாவால் வெறுக்கப்படும் பிரித்தானியர்கள் பட்டியலை வெளியிட்ட விளாடிமிர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட பிரித்தானியர்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.
புதிய பட்டியல்
பிப்ரவரி 2022ல் அவர் முதன்முதலில் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, ரஷ்ய தூதர்கள், அரசியல் ஈடுபாடுகொண்ட பெரும் பணக்காரர்கள் மற்றும் பொதுவாக ரஷ்ய ஆதரவு நபர்கள் மீது பிரித்தானியா தடைகளை விதித்திருந்தது.
இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் செல்வாக்குமிக்க சில பிரித்தானியர்கள் மீதும் தடைகளை விதித்தது. ஆனால், ரஷ்யா விதித்துள்ள தடைகளால் இதுவரை எந்த தாக்கவும் ஏற்பட்டதும் இல்லை.
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் புதிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன், ரஷ்யாவை உலக அரங்கில் கொடூரமாக சித்தரிக்கும் முயற்சிகளை குறைக்க விரும்புவதாகவும்,

ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவிருக்கும் மிகப்பெரிய புதிய மாற்றம்... பிரித்தானியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்
ரஷ்யாவின் செல்வாக்கைக் குறைப்பதற்காக பிரித்தானியா பரப்பும் ரஷ்ய எதிர்ப்புக் கதைகளை நொறுக்குவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் 21 பிரித்தானிய அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யாவையும் ஜனாதிபதி புடினையும் கடுமையாக விமர்சித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளது.
துணைப் பிரதமர் ஏஞ்சலா
கடந்த 2022 முதல், பிரித்தானியாவின் கருவூலம் நாட்டில் உள்ள 25 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை முடக்கியுள்ளதுடன் ரஷ்யா மற்றும் புடினுடன் தொடர்புடைய 2,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடை விதித்துள்ளது.
ரஷ்யா வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஐந்து லேபர் கட்சி எம்.பி.க்கள், எட்டு லிபரல் டெமாக்ரடிக் எம்.பி.க்கள், ஒரு டி.யு.பி எம்.பி. மற்றும் ஒரு எஸ்.என்.பி எம்.பி. ஆகியோர் அடங்குவர்.
பிரித்தானியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா பிரித்தானிய எம்.பி.க்களை தடை செய்வது இது முதல் முறை அல்ல.
நவம்பர் 2024 ல் ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தடை பட்டியலில் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், யெவெட் கூப்பர் மற்றும் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஜொனாதன் ரெனால்ட்ஸ் மற்றும் எட் மிலிபாண்ட் போன்ற பிற அமைச்சரவை உறுப்பினர்களும் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |