48 மணிநேரத்தில் பேச்சுவார்த்தை: உக்ரைன் தொடர்பில் முக்கிய ஒப்பந்தம்..மீண்டும் தொடங்கும் புடின்
கருங்கடலில் உக்ரேனிய விவசாய ஏற்றுமதிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை, புடின் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
48 மணிநேரத்தில் பேச்சுவார்த்தை
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் தீவிர சண்டையை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த சூழலில், ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிரதிநிதிகள் அடுத்த 48 மணிநேரத்தில் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் தொடர்பாக கடினமான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் தானிய ஒப்பந்தம்
ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர், "நாங்கள் இந்தப் பாதையின் தொடக்கத்தில் மட்டுமே இருக்கிறோம். சாத்தியமான போர்நிறுத்தத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து, பல கேள்விகள் மற்றும் நுணுக்கங்கள் நிலுவையில் உள்ளன.
கருங்கடலில் உக்ரேனிய விவசாய ஏற்றுமதிகளுக்கு பாதுகாப்பான வழிசெலுத்தலை உறுதி செய்யும், 2022 கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிப்பதுதான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் முக்கிய கவனமாக இருக்கும்.
திங்கட்கிழமை நாங்கள் முக்கியமாக, கருங்கடல் முயற்சி என்று அழைக்கப்படுவதை மீண்டும் தொடங்குவதற்கான ஜனாதிபதி புடினின் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். மேலும், இந்த சிக்கலைச் சுற்றியுள்ள நுணுக்கங்களைப் பற்றி விவாதிக்க எங்கள் பேச்சுவார்தையாளர்கள் தயாராக இருப்பார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |