தவறு செய்துவிட்டார்கள்! ஐரோப்பிய மற்றும் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம்: புடின் காட்டம்
ஐரோப்பிய மற்றும் பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு ஐரோப்பா தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
ரஷ்யன் எரிசக்தி அதிகாரிகளுடனான சந்திப்பில் பேசிய புடின், அவர்கள் (ஐரோப்பா) தவறு செய்துவிட்டார்கள்.
spot மார்க்கெட்டுக்கு ஆதரவாக நீண்ட கால ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டுவந்தது தான் எரிவாயு விலை உயர்க்கு ஒரு முக்கிய காரணியாகும்.
இந்த கொள்கை தவறானது என இன்று தெளிவாகியுள்ளது என புடின் கூறினார்.
ஐரோப்பிய மற்றும் பிரித்தானியாவில் எரிவாயு விலை புதன்கிழமை 25 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தது.
மேற்கு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ரஷ்ய எரிசக்தி விநியோகத்தை நிறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரஷ்யா-ஜேர்மனியை இணைக்கும் சர்ச்சைக்குரிய Nord Stream 2 குழாய் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியாக, ரஷ்யா வேண்டுமென்றே ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை மட்டுப்படுத்தியதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த புடின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov, ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் கீழ் ரஷ்யா அதன் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளது, நிறைவேற்றுகிறது மற்றும் பொறுப்புடன் நிறைவேற்றும் என உறுதியளித்துள்ளார்.