ரஷ்ய ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு புடினின் உத்தரவு: குலை நடுங்க வைத்த சம்பவம்
உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் அதிருப்திக்கு இலக்கான விளாடிமிர் புடின், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு திடீரென்று விடுத்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு 24ம் நாளை எட்டியுள்ள நிலையிலும், இரண்டு நாட்களில் முடித்துக்கொள்வதாக கூறப்பட்ட போர் இன்னும் நீடித்து வருகிறது. இதில் ரஷ்ய துருப்புகள் ஒருபக்கம் உக்ரைன் கிராமங்கள், நகரங்களை கடுமையாக தாக்கி சிதைத்து வந்தாலும், உக்ரைன் ராணுவத்தின் திட்டமிட்ட எதிர் தாக்குதலால் கடும் உயிரிழைப்பையும், பின்னடைவையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 23 நாட்களில் மட்டும் ரஷ்ய தரப்பில் 17,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவால் உக்ரைன் இராணுவம் நவீன ஆயுதங்களையும் யுத்திகளையும் முன்னெடுத்து வருகிறது.
இதில் கடும் அதிருப்தியில் தடுமாறும் விளாடிமிர் புடின், தமது நெருக்கமான வட்டாரத்தில் கோபத்தை வெளிப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புடின் மனம் திறந்து பேசியே நாட்களாகிவிட்டது எனக் கூறும் அவர்கள், தமது பிள்ளைகளிடம் கூட அதிகமாக இப்போதெல்லாம் புடின் பேசுவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தான், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு அணு ஆயுத தாக்குதல் தொடர்பான வெளியேறும் ஒத்திகை முன்னெடுக்க விளாடிமிர் புடின் அவசர உத்தரவிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், ஜனாதிபதியின் திட்டந்தான் என்ன என்பது தொடர்பில் குழப்பமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மறுப்பேதும் தெரிவிக்காமல் அனைவரும் ஒத்திகைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவே கூறப்படுகிறது.