கீவ்வை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம்! ரஷ்ய அதிரடி அறிவிப்பு
கீவ் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவோம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
கருங்கடல் ரஷ்யாவின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு உக்ரைன் பொறுப்பேற்றதை அடுத்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இவ்வாறு உறுதியளித்துள்ளது.
உக்ரேனிய ஏவுகணைகளை தயாரித்து பழுதுபார்க்கும் தலைநகர் கீவில் உள்ள ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய கூறியுள்ளது.
இன்று காலை தலைநகர் கீவில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவில் கேட்ட பயங்கர வெடி சத்தம்.. பீதியில் மக்கள்! வெளியான வீடியோ
ரஷ்யா தாக்குதலின் விளைவால் நகரில் உள்ள சில மாவட்டங்களில் மின்சாரம் தடைகப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கீவ் மட்டுமின்றி தெற்கு நகரமான கெர்சன், கிழக்கில் கார்கிவ் மற்றும் மேற்கில் Ivano-Frankivsk நகரங்களிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.