ஆக்ஸிஜன் கிடைக்காததால் 4 மணிநேரம் ஆம்புலன்சில்.. காத்திருந்து உயிரை விட்ட இளைஞர்!
கொரோனா வைரஸ் ஆனது தமிழகத்தை ஆட்டிபடைத்துகொண்டிருக்கும் வேலையில் மக்கள் இன்றளவும் அச்சமின்றி சுற்றி வருவது வேதனை அளிப்பதாக அரசு தெரிவித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியும் கிடைக்காமல், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டாலும் கொரோனா நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் அந்த இளைஞர் சுமார் 4 மணி நேரமாக ஆம்புலன்சிலையே காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஆம்புலன்சில் அவருக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்தால் அந்த இளைஞர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே பலரும் கோரிக்கை வைப்பது அலட்சியம் இன்றி இனியும் இருக்காதீர்கள் என கூறி வருகின்றனர்.