அஸ்வினிடம் பந்தை கொடுத்து காண்பிக்க சொன்ன குல்தீப்! சுவாரஸ்ய சம்பவம்
இங்கிலாந்துக்கு எதிரான 5 -வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
5 -வது டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 -வது டெஸ்ட் தொடர் தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
அப்போது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணியில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்பு, இன்னிங்ஸ் முடிந்ததும் வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பினர்.
நெகிழ்ச்சி நிகழ்வு
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பவுலர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினால், அந்த இன்னிங்க்சில் வீசப்பட்ட பந்தை ரசிகர்களிடம் காண்பித்து செல்வது கவுரமாக பார்க்கப்படும்.
??????? ???? ?????!
— BCCI (@BCCI) March 7, 2024
R Ashwin ? Kuldeep Yadav
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @ashwinravi99 | @imkuldeep18 | @IDFCFIRSTBank pic.twitter.com/hJyrCS6Hqh
அந்தவகையில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், தான் அந்த பந்தை காண்பிக்காமல் அஸ்வினிடம் கொடுத்தார். அதனை ஏற்க மறுத்த அஸ்வின், குல்தீப் யாதவிடமே மீண்டும் பந்தை கொடுத்தார்.
இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |