இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும்..ஜாம்பவான் வீரர் வெளியிட்ட பதிவு
இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கருத்து பதிவிட்டிருந்தார்.
75வது சுதந்திர தினம்
பிரித்தானியாவிடம் இருந்து 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கை அரசியல் சுதந்திரத்தைப் பெற்றது.
நேற்று சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை இலங்கை எட்டியது கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொடியேற்றினார்.
சுதந்திர தினம் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் குமார் சங்ககாரா ட்வீட் செய்திருந்தார். அவரது பதிவில்,
'இது ஒரு குறிப்பிடத்தக்க நாள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும், அதன் உண்மையான சாராம்சத்தையும், பொருளையும் கண்டறிவதற்கான எங்கள் பயணம் தொடர்கிறது' என தெரிவித்திருந்தார்.
75 years of independence. A Significant Day. Our journey to find it’s true essence and meaning continues; For all our peoples in Sri Lanka
— Kumar Sangakkara (@KumarSanga2) February 4, 2023