கேரளாவின் பாரம்பரியமான கும்பிளப்பம்.., இலகுவாக செய்வது எப்படி?
கும்பிளப்பம் என்பது கேரளாவின் பாரம்பரியமான மற்றும் பிரபலமான சிற்றுண்டி வகைகளில் ஒன்றாகும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கும்பிளப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் துண்டுகள்- ½ கப்
- வெல்லம்- 1 கப்
- வாழைப்பழம்- 4
- அரிசி மாவு- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல்- ½ கப்
- பிரிஞ்சி இலை- 10
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நெய் சேர்த்து தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து மசித்த வாழைப்பழத்தில் அரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், கரைத்த வெல்லம், நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் சேர்த்து கெட்டியாக கலந்துகொள்ளவும்.
இறுதியாக இதனை பிரிஞ்சி இலையில் வைத்து மடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கும்பிளப்பம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |