குருந்தூரில் சிவன் சிலையை உடைத்தெறிந்தார்களா? அம்பலப்படுத்திய சிறீதரன்
இலங்கையின் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக விகாரை கட்டியெழுப்பிய போது அங்கிருந்த ஆதிலிங்க சிவன் சிலையை உடைத்தெறிந்தார்களா? என்று சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம்
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று பேசிய உறுப்பினர் சிறீதரன், முல்லை தீவு குருந்தூர் மலைப்பகுதி ஆதி சிவன் ஆலயத்தில் அகழ்வுகளை மேற்கொண்ட போது சிவன் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அது அனைவருக்கும் காட்டப்பட்டும் உள்ளது.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் தற்போது காணவில்லை, அப்பகுதியில் விகாரை அமைக்கப்படும் போது கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை உடைத்து எறிந்தார்களா? அல்லது அங்கிருந்த சிவன் வேறு எங்கும் தாக்கப்பட்டு விட்டதா? என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
1905ம் ஆண்டு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அகழ் ஆராய்ச்சியாளரால் மேற்கொள்ளப்பட்ட அகழ் ஆய்வில், குறுந்தூர் மலையில் அவுடையார் என்ற சிவலிங்கமும், நம்பியும் கண்டுடெடுக்கப்பட்டு அங்கு சைவ வழிபாட்டு ஆலயம் இருந்தற்கான உறுதிப்பாட்டை சொல்லி இருக்கிறார்கள் என குறிப்பிட்டு பேசினார்.
குருந்தூர் மலை விவகாரம் குறித்து உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |