மன்னம்பிட்டி விபத்து தொடர்பில் சாணக்கியன் அதிர்ச்சித் தகவல்
மன்னம்பிட்டி பேருந்து விபத்து தொடர்பாக பல அதிர்ச்சி தரும் தகவல்களை சாணக்கியன் வெளியிட்டுள்ளார்.
மன்னம்பிட்டி பேருந்து விபத்து
சமீபத்தில் மன்னம்பிட்டி பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மட்டகளப்பில் இயங்கி வரும் பேருந்துகளின் உரிமையாளர்கள் குறித்தும், போக்குவரத்து துறை அனுமதியின்றி இயங்கி வரும் 10 பேருந்துகள் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டார்.
மேலும் இதற்கு பின்னால் அரசியல் பின்னணி இருக்கிறது, இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டது, எனவே பலியான அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது குழப்பம் விளைவிக்க முயற்சித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
இது தொடர்பான முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |