இலங்கை அணிக்கு பயத்தை காட்டிய 21 வயது பவுலர்! ஆனாலும் நின்று 67 ரன் விளாசிய வீரர்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 256 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
டன்ஸிம் ஹசன் சாகிப்
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சாட்டோக்ராமில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. நிசங்கா, அவிஷ்கா முதல் விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் குவித்தனர்.
ஆட்டத்தின் 10வது ஓவரில் வங்கதேச பந்துவீச்சாளர் டன்ஸிம் ஹசன் சாகிப் இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்தார்.
அவரது பந்துவீச்சில் அவிஷ்கா பெர்னாண்டோ 33 ஓட்டங்களில் அவுட் ஆக, நிசங்கா 36 ஓட்டங்களில் டன்ஸிமின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சமரவிக்ரமா 3 ஓட்டங்களில் டன்ஸிமின் பந்துவீச்சில் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கை அணி சற்று தடுமாறியது.
Kusal Mendis scores his 29th fifty-plus score!? #BANvSL pic.twitter.com/LElcn6dXPL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 13, 2024
இலங்கை அணி 255
எனினும், குசால் மெண்டிஸ் மற்றும் ஜனித் லியானகே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் இலங்கை அணி 255 ஓட்டங்கள் எடுத்தது.
குசால் மெண்டிஸ் 75 பந்துகளில் 59 ஓட்டங்கள் விளாசினார்.லியானகே 69 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்தார்.
In red-hot form! ♨️
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 13, 2024
Janith Liyanage slams another brilliant fifty, his third in a row in ODIs! #BANvSL pic.twitter.com/GQBoJsD9cJ
வங்கதேச தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், டன்ஸிம் ஹசன் மற்றும் தஸ்கின் அகமது தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
255 on the board for Sri Lanka. Janith Liyanage leads the way with a well-fought 67.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 13, 2024
Can the bowlers hold their nerve and defend this score? #BANvSL pic.twitter.com/jEp7ECFPlo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |